சென்னை,
யார் நண்பர், யார் பகைவர் என அடையாளம் காட்டிய தேர்தல் இது என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் இருந்து முஸ்லீம் லீக் விலகியது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இந்த தேர்தலில் யார் நண்பர்கள், யார் சந்தர்ப்பவாதிகள் என தெரிந்துள்ளது. யார் நண்பர், யார் பகைவர் என அடையாளம் காட்டிய தேர்தல் இது. தவெக அமைச்சரவையில் ஐயூஎம்.எல். இடம்பெற்றுவிட்டனர். எனவே கூட்டணியில் இருந்து வெளியேறிதான் ஆக வேண்டும். முஸ்லீம் லீக் முடிவையே மதிமுக எடுக்கும்.
எங்கள் பலம் எங்களுக்கு தெரியும். எங்களுடன் இருந்த கூட்டணி கட்சிகள் பதவி ஆசையால் சென்றுவிட்டன.
விஜய் ஆட்சி அமைப்பார் என ஊடக கணிப்பு சொல்லவில்லை. சில கட்சிகள் பலியாகி உள்ளன. தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தால் திமுக கூடுதல் இடத்தில் போட்டியிட்டிருக்கும் என்றார்.