தமிழக செய்திகள்

ஆசைவார்த்தை கூறி உல்லாசம்: திடீரென காதலி விலகியதால் வீடியோ எடுத்து மிரட்டிய என்ஜினீயரிங் மாணவர்

தேனியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர்கள் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மதுரை,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச்சேர்ந்தவர் வசந்த்(வயது21). மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் பயின்ற 20 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி இருக்கிறார். இதைதொடர்ந்து அந்த மாணவியும் காதலித்துள்ளார்.பின்னர் தேனியில் உள்ள ஒரு வீட்டுக்கு மாணவியை வசந்த் அழைத்துச்சென்றுள்ளார்.

காதலனுக்கு போதை பழக்கம்

பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர்கள் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை, மாணவிக்கு தெரியாமல் வசந்த் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதற்கிடையே வசந்துக்கு போதைப்பழக்கம் இருந்ததாகவும், எனவே மாணவி அவருடன் பழகுவதை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத் திரமடைந்த வசந்த், மாணவியுடன் தனிமையில் இருந்த வீடியோவை காண்பித்து மிரட்டியுள்ளார். தன்னுடன் பழக வில்லை என்றால். அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி, மனஉளைச்சலுக்கு உள்ளாகி வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிகிறது. அதன்பின் னர் பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதையடுத்து மாணவியின் தாயார், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி. கல்லூரி மாணவர் வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT