தமிழக செய்திகள்

குற்றாலநாதர் கோவில் அலுவலகத்தில் புகுந்த உடும்பு!

பிடிபட்ட உடும்பை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்று குற்றாலம் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சுமார் 10 கிலோ எடையுள்ள உடும்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை

கோவில் அலுவலகத்தில் இருந்த மேஜைக்கு அடியில் உடும்பு பதுங்கி இருப்பதை பார்த்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், மேஜைக்கு அடியில் பதுங்கியிருந்த உடும்பை லாவகமாகப் பிடித்தனர்.

குற்றாலம் வனப்பகுதியில் விடுவிப்பு

பிடிபட்ட உடும்பை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்று குற்றாலம் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

SCROLL FOR NEXT