தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது

கோத்தகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

கோத்தகிரி

கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் மற்றும் போலீசார் கோத்தகிரி கேர்பெட்டா அம்மன் நகர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பாப்பாத்தி (வயது 63) என்பவரது கடையில் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

SCROLL FOR NEXT