சென்னை,
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
முதலாம் ராஜராஜ சோழரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த "ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்களை" நெதர்லாந்து அரசிடம் இருந்து மீட்டு, மீண்டும் நமது நாட்டிற்கு கொண்டு சேர்த்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆனைமங்கலம் செப்பேடுகள் வெறும் கலைப்பொருள் மட்டுமல்ல. ஆசிய பெருங்கண்டம் முழுவதும் வர்த்தகம் மற்றும் ஆட்சி செய்த தமிழ் நாகரிகத்தின் வாழும் பதிவுகள் அவை. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு இடமளித்ததில் இருந்து, ஆனைமங்கலம் செப்பேடுகளைத் தாயகம் கொண்டு வந்தது வரை - நமது மோடி அரசாங்கம் தொடர்ந்து தமிழ் நாகரிகத்தைக் கொண்டாடி வருகிறது.
"ஆனைமங்கல செப்புப்பட்டயங்கள்", மீண்டும் நமக்கு கிடைத்திருப்பது தமிழரான நம் அனைவருக்கும் பெருமை..!! வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.