தமிழக செய்திகள்

அன்பில் மகேஷ் கைது: மிரட்டலுக்கு திமுக அஞ்சாது - சேகர்பாபு

அன்பில் மகேஷ் மன உறுதியுடன் உள்ளார் என சேகர்பாபு கூறினார்.

சென்னை,

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அன்பில் மகேஷ் கைது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”அடிப்படை முகாந்திரமின்றி அன்பில் மகேஷை கைது செய்து மிரட்ட பார்க்கிறார்கள். மிரட்டலுக்கு திமுக அஞ்சாது. அன்பில் மகேஷ் மன உறுதியுடன் உள்ளார். மேலும் உறுதியுடன் இருப்பார். காவல்துறை அழைத்தபோதெல்லாம் விசாரணைக்கு ஒத்துழைத்த அன்பில் மகேஷ் ஓடி ஒளியக்கூடிக்கூடியவர் அல்ல. திமுக தலைவர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் எங்களுக்கு துணை நிற்கும் வரை அச்சம் இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT