சென்னை,
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அன்பில்மகேஷ் கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் அன்பில்மகேஷை கைது செய்துள்ள இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி முதல்-அமைச்சர்.
சகோதரர் அன்பில் மகேஷ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.