தமிழக செய்திகள்

அன்பில் மகேஷ் மீதான வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

இந்த விசாரணையை மாநில போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது என மனு தாரர் கூறி இருந்தார்.

சென்னை,

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில், அன்பில் மகேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில், நெல்லையைச் சேர்ந்த வக்கீல் வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கட்சி நிதி என்ற பெயரில் தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் வாங்கியிருப்பது தீவிரமான குற்றச்சாட்டாகும். இந்த விவகாரம் தொடர் பாக முன்னாள் அமைச்சர், தற்போதையை அமைச்சர் மரியவில்சன், அரசு துறை செயலாளர்கள், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

இந்த விசாரணையை மாநில போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. அதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜி.அருள்முருகன் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசா ரணை வேறொரு டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்றும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT