தமிழக செய்திகள்

அன்பில் மகேஷ் வழக்கு: தொழில் அதிபர் சண்முக பிரியா வீட்டில் போலீஸ் ரெய்டு

அன்பில் மகேஷின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை,

கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனக்கு ஜாமின் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. மேலும் அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச புகார் தொடர்பாக சென்னை பெருங்குடியில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தொழில் அதிபர் சண்முகபிரியா வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 10 பேர் கொண்ட போலீசார் காலை முதல் சண்முக பிரியா வீட்டில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT