திருச்சி,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
அன்பில் மகேஷ் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் மீண்டும் அமைச்சராவார். அனைத்து பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர மேம்பாடு செய்வதிலும் மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பதிலும் அன்பில்மகேஷ் கடுமையாக உழைத்தார் என்றார்.