சென்னை,
அன்பில் மகேஷ் தப்பிச் செல்ல மாட்டார், அவருக்கு ஜாமின் கொடுங்கள் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதிட்டார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட் டது.
அதன்படி, கடந்த 2-ந்தேதி முதல் அன்பில் மகேஷை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அன்பில் மகேஷ் மிக நிதானமாக பதில் அளித்துள்ளார். போலீசாரும் மிக சாதுர்யமாக எந்த நெருக்கடிக்கும் அன்பில் மகேஷை உட்படுத்தாமல் கேள்விகளை கேட்டு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
விசாரணைக்கு பின்பு நேற்று மாலை அன்பில் மகேஷ், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சத்திய மூர்த்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, போலீசார் துன்புறுத்தினார்களா? முறையாக உணவு உள்ளிட்டவைகள் வழங் கப்பட்டதா? என அன்பில் மகேஷிடம் நீதிபதி கேள்வி எழுப்பி னார். அதற்கு அன்பில் மகேஷ் தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், முறையாக உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டதாகவும் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அன்பில் மகேஷின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், கைதுக்கு முன்னர் மத்திய குற்றப்பிரிவு சம்மனை ஏற்று அன்பில் மகேஷ் ஆஜராகி 8 மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். 3 நாள் போலீஸ் காவலின் போதும் விசாரணைக்கு அன்பில் மகேஷ் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். வழக்கின் புலன் விசாரணைக்கு போலீசார் கோரிய ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முதலில் ரூ.100 கோடி லஞ்சம் என்றார்கள் தற்போது ரூ.800 கோடி என உயர்த்தியுள்ளார்கள். அரசகுமார் தான் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்தார்; அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என பொய் சொல்லி அரசகுமார் தான் ரூ.100 கோடி வசூலித்துள்ளார். அரசகுமார் பணம் வசூலித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தற்போது போலீசார் மாற்றியுள்ளனர். ஊழல் வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் என்பதை 20 ஆண்டுகளாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையில் கையெழுத்திட்டது அரசு கூடுதல் செயலாளர், அன்பில் மகேஷ் இல்லை. 20 வருடங்களுக்கு ஒரு முறை அங்கீகாரம் என்பது கூட்டாக எடுத்த முடிவு. அங்கீகாரம் வழங்குவது தொடர்பான அரசாணை பல துறை அதிகாரிகளை கடந்துதான் சென்றுள்ளது.
அரசகுமார் பொய் சொல்லியிருந்தால் அன்பில் மகேஷ் என்ன செய்ய முடியும்?. அரசகுமாருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியவர்கள் வாக்குமூலத்தில் என்னை (அன்பில் மகேஷை) கைது செய்துள்ளனர். லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டவர்களை ஏன் போலீஸ் கைது செய்யவில்லை?. அரசகுமார் செய்த தவறுக்கு அன்பில் மகேஷை ஏன் காரணம் ஆக்க வேண்டும்?. லஞ்சம் கொடுத்தவர்கள் சாட்சிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.
செல்வாக்குள்ள நபர் என போலீசார் கூறினாலும் அன்பில் மகேஷ் எங்கும் தப்பிச் செல்லப்போவதில்லை. ஆகையால் அவருக்கு ஜாமின் அளிக்க வேண்டும். அன்பில் மகேஷ் ஒருபோதும் ஆதாரங்களை கலைக்கமாட்டார். இவ்வாறு வாதங்களை முன்வைத்தார்.
இதனையடுத்து காவல்துறை தரப்பில் வாதிடுகையில், அங்கீகாரம் கோரும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்துள்ளனர். அரசகுமாரும், முத்துகுமாரும் சேர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தை நடத்தினர். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் தொடர்பு குறித்து பள்ளி உாிமையாளா்களான புகாா்தாரா்களுக்கு தொியாது. விஞ்ஞான ரீதியிலான ஊழல் நடந்துள்ளது. அது பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்து உள்ளது.
அன்பில் மகேஷ் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல. அன்பிலை காவலில் எடுத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள புதிய ஆதாரங்கள் குறித்து அன்பிலிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. முத்துகுமார் சரணடைந்ததன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. முத்துகுமாரை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டும். முத்துகுமார் குறித்தும் அன்பில் மகேஷிடம் விசாரிக்க வேண்டியுள்ளது.
அன்பில் வீட்டிற்கு பணத்தை எடுத்து சென்ற சரவணன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்று உள்ளது. அன்பில் மகேஷை மீண்டும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது. தற்போதைய நிலையில் ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும். புதிய பி.என்.எஸ். சட்டப்படி 60 நாள்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும். என்று வாதிட்டனர்.
இதனையடுத்து அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், சரவணன் பணம் எடுத்துச் சென்ற வீடியோ ஆதாரத்தை சமர்பிக்க முடியுமா?. என் வீட்டிற்கு பணம் கொண்டு சென்றதாக வீடியோ இருந்தால் வழக்கு முடியும் வரை ஜாமின் வேண்டாம். வீடியோ ஆதாரத்தை போலீசார் சமர்பித்தால் ஜாமின் மனுவை திரும்ப பெறுகிறோம் என வாதிடப்பட்டது.
இறுதியில் இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி அன்பில் மகேஷின் ஜாமின் மனு மீது வருகிற 10-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்து அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார். இதன்மூலம் தீபாவளி பண்டிகையன்று அன்பில் மகேஷ் புழல் சிறையிலேயே இருப்பார்.