தமிழக செய்திகள்

அன்பில் மகேஷ் கைது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை, பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சென்னை,

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அன்பில் மகேஷ் கைது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது குறித்து அவர் பேசியதாவது;

திமுக ஆட்சியில் முறைகேடு

”திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை, பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. வளமான துறைகளை தேர்ந்தெடுத்து பணம் எடுப்பதே நோக்கமாக இருந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித் துறை ரூ.30 ஆயிரம் கோடி, 40 ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும்போது அதில் ரூ.10 சதவீதம் எடுத்து விட்டாலே ரூ.3 ஆயிரம் கோடி.

பா.ஜ.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த அரச குமாருக்கு ஒரு பதவியை கொடுத்துவிட்டு அவரை கலெக்ஷன் பண்ணும் ஏஜெண்டாக மாற்றி விட்டார்கள். கலெக்ஷன் பணம் அமைச்சர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் சென்றுள்ளது. இவை அனைத்தையும் நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.

உண்மையை எடுத்துச் சொல்ல..

மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். யாரையும் பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் இல்லை. தோல்வியுற்றவரை கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கல் கிடையாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT