தமிழக செய்திகள்

ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக இணையர் ஜோஸ்னா - செந்தில் குமாருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

இதே போட்டியின் பிற ஆட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வெல்ல வாழ்த்துகள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, செந்தில்வேலவன் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக இணையர் ஜோஸ்னா - செந்தில் குமாருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக இணையர் ஜோஸ்னா - செந்தில் குமாருக்கு வாழ்த்துகள்.

ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணையர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கி்றது. அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெண்கலப் பதக்கம்

இந்தப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த இணையர், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஹாங்காங் இணையரிடம் போராடித் தோல்விடைந்தனர். விதிகளின்படி அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது. இதே போட்டியின் பிற ஆட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வெல்ல வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT