தமிழக செய்திகள்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடி, பாராட்டு தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை அன்புமணி ராமதாஸ் பாராட்டி பேசினார்.

சென்னை

சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்மிண்டன் விளையாடினார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க விழா நடந்தது. இந்த போட்டியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பா.ம.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு பேட்மிண்டன் கூட்டமைப்பு தலைவரான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அன்புமணி ராமதாஸ் பாராட்டு

பேட்மிண்டன் போட்டியை தொடங்கி வைத்து மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை பாராட்டி பேசினார்.

அப்போது அவர், போதைப்பொருளுக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடியது வரவேற்கத்தக்கது. முந்தைய விளையாட்டு அமைச்சர்களை விட ஆதவ் அர்ஜுனா முற்றிலும் மாறுபட்டவர். வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், இளம் வீரர்களுடன் இணைந்து, எதிர் எதிரணிகளில் இருந்தபடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் பேட்மிண்டன் விளையாடினர். அப்போது கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பி உற்சாகம் ஏற்படுத்தினர்.