தமிழக செய்திகள்

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

நூறாண்டு நோயில்லா நிறைவாழ்வு வாழ்ந்து பொதுவாழ்விலும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்து

அந்த வகையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், எனது நண்பருமான மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திரையுலகில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ள உலக நாயகன், நூறாண்டு நோயில்லா நிறைவாழ்வு வாழ்ந்து பொதுவாழ்விலும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT