தமிழக செய்திகள்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்காத ஆத்திரம்... செவிலியர் மீது தாக்குதல்

இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே அரசு சார்பில் வழங்கப்படும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்காத ஆத்திரத்தில், கிராம சுகாதார செவிலியர் உள்பட 3 பேரை இளைஞர் மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம சுகாதார செவிலியர்

கும்பகோணம் முழையூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி வனிதாவுக்கு அரசு மருத்துவமனையில் 2-வது குழந்தை பிறந்துள்ளது. பம்பப்படையூரை சேர்ந்த அலமேலு, பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருகிறார்.

தகராறு

இந்த நிலையில், மதனின் குழந்தைக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன், செவிலியர் அலமேலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு முற்றிய நிலையில், மதன் மண்வெட்டியால் அலமேலு மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 3 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT