கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அனிதா ராதாகிருஷ்ணன் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு.

அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும்தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.