தமிழக செய்திகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு 'அஞ்சலையம்மாள்' விருது: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

அதிக மகசூல் பெறும் முதல் 30 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்க 50 லட்சம் ஒதுக்கப்படும் என அமைச்சர் வினோத் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.

30 விவசாயிகளுக்கு பரிசு

மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் சிறு, குறு விவசாயி விருது குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:-

2026-27 ஆம் ஆண்டில், சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க, 'மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள்' பெயரில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு பயறு வகைகள், எண்ணெய்வித்துகள் சிறுதானியங்கள், உள்ளிட்ட 10 பயிர்களில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு முறையே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் என மொத்தம் 30 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்க 50 லட்சம் ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.