தமிழக செய்திகள்

அண்ணாமலை பிறந்தநாள் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து

அண்ணாமலை சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் என் ஆருயிர் தம்பி அண்ணாமலை அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சிறந்த ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்