தமிழக செய்திகள்

அண்ணாமலை பிறந்தநாள்: வானதி சீனிவாசன் வாழ்த்து

அண்ணாமலை தேசத்திற்கும் தமிழகத்திற்கும் மேலும் பல சேவைகளை ஆற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கோவை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியிலும், அரசியல் பணியிலும் சிறந்து விளங்கி, தேசத்திற்கும் தமிழகத்திற்கும் மேலும் பல சேவைகளை ஆற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.