தமிழக செய்திகள்

நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா- அண்ணாமலை வாழ்த்து

20 வயதான பிரக்ஞானந்தா நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

சென்னை,

நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 20 வயதான பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டக்தை உறுதி செய்தார்.

வாழ்த்துகள்

இந்த நிலையில் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நார்வே செஸ் 2026 பட்டத்தை வென்ற நமது வீரர் பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ச்சியாக நான்கு கிளாசிக்கல் ஆட்டங்களில் வெற்றி பெற்று, உலக சாம்பியன்களை வீழ்த்தி, ஒரு அற்புதமான இறுதி ஆட்டத்தின் மூலம் பட்டத்தைக் கைப்பற்றியது ஒரு மகத்தான சாதனையாகும்.

அவரது இந்த மிகச்சிறந்த சாதனைக்காக தமிழகமும், ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.