தமிழக செய்திகள்

அண்ணாமலை டெல்லி பயணம்; நிதின் நபினை சந்தித்து பேச திட்டம்..?

தமிழகத்தில் இருந்து அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் என்ற அடிப்படையில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

புதுடெல்லி

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அல்லது நாளை டெல்லிக்கு செல்ல இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தில், டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நிதின் நபின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி புதிய கட்சி அல்லது புதிய அரசியல் அமைப்பை தொடங்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது. தன்னுடைய நிலைப்பாட்டை கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்பதற்காக அண்ணாமலை டெல்லி செல்ல இருக்கிறார். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக நாளை மறுநாள் அறிவிப்பார் என அரசியலில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்றும், அவருக்கு அக்கட்சி என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டம் இன்று மதியம் 1 மணியளவில் நடக்கிறது. இதில், தமிழகத்தில் இருந்து அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் என்ற அடிப்படையில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். எனினும், இந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.