தமிழக செய்திகள்

அண்ணாமலை ‘பாட்காஸ்ட்’ நிகழ்ச்சி யூடியூப்பில் இன்று வெளியிடுகிறார்

இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலை தனது யூடியூப் சேனலில் இதனை வெளியிடுகிறார்.

சென்னை,

தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை பா.ஜனதாவில் இருந்து விலகி ’வி த லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார். இந்த புதிய இயக்கத்தில் நேற்று இரவு 10.30 மணியளவு வரை 18 லட்சத்து 4 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், "எங்கள் அரசியல் இயக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகு வெளியாகும் எனது முதல் பாட்காஸ்ட் நிகழ்ச்சி தயாராக உள்ளது. இது நாளை (இன்று) காலை 10 மணிக்கு எனது (அண்ணாமலையின்) யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும்" என்று தெரிவித்து உள்ளார்.