தமிழக செய்திகள்

வேறு பெயரில் ரிலீஸ்... அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி

அனைவரையும் நாங்கள் அரவணைக்கிறோம் என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

த.வெ.க.வுக்கு முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் உள்பட பலரும் வருகிறார்கள். அனைவரையும் நாங்கள் அரவணைக்கிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளே அந்த கட்சியின் தற்போதைய நிலைக்கு காரணம். தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து அ.தி.மு.க ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டதால் அ.தி.மு.க.வுக்கு இந்தநிலை.

அரசியல் இயக்கம், கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். இது ஜனநாயக உரிமை. பாஜக பலமுறை முயற்சி செய்து தமிழ்நாட்டில் தொடர் தோல்வி அடைந்துள்ளது. திருப்பி இன்னொரு முயற்சி எடுத்து இருக்காங்க; பா.ஜனதாவை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவேதான் அண்ணாமலை மூலம் இன்னொரு முயற்சி மேற்கொள்கிறார்கள்.

ஒரு படம் தோல்வி அடைந்தால், மீண்டும் வேறு பெயரில் ரிலீஸ் செய்தாலும் தோல்வி நிச்சயம். இது பா.ஜனதாவுக்கும் பொருந்தும். பா.ஜனதாவின் ஓட்டுவங்கியில் உள்ள ஆதரவாளர்கள் இப்போது அண்ணாமலை இயக்கத்தில இணைந்துள்ளனர். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.