சென்னை
2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு அடைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபையில், 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார்.
அவர் பேசும்போது, புதிய துறைமுகம் அமைக்க சாத்தியகூறுகளை அரசு ஆராயும். வெளிநாடு வாழ் தமிழக முதலீட்டு பிரிவு அமைக்கப்படும். தூத்துக்குடி, நெல்லை விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என குறிப்பிட்டார். 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
8 கிராம் தங்க நாணயம், அண்ணன் சீர்திட்டம் - ரூ.812 கோடி ஒதுக்கீடு
கருவுற்ற பெண்களுக்கு தாய் கேர் திட்டம் - ரூ.23 கோடி
நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் - ரூ.33 கோடி
12 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் - ரூ.6.6 கோடி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ.23,357 கோடி
மாற்று திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1 485 கோடி ஒதுக்கீடு
புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனை - ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
கால்நடை, மீன்வளத்துறைக்கு - ரூ.4,880 கோடி
ரூ.57 கோடிக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
தீவன விதை வங்கிகள் & கிடங்குகள் - ரூ.6.7 கோடி
ரூ.122 கோடிக்கு கால்நடை மருத்துவ சேவைகள்
கால்நடைகள் காப்போம் திட்டம் - ரூ.31 கோடி ஒதுக்கீடு
கால்நடை மருத்துவ சேவைகள் ரூ.122 கோடி
வெற்றி ஆடுகள் வளர்ப்பு திட்டம் - 5 ஆடுகள் வழங்கப்படும்
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் - ரூ.110 கோடி ஒதுக்கீடு
மீனவர் நலன் உதவித்தொகை திட்டம் - ரூ.135 கோடி
மீன்பிடி உதவித்தொகை ரூ.7,000 ஆக உயர்த்தப்படும்
கால்நடை, மீன்வளத்துறைக்கு - ரூ.4,880 கோடி
வேளாண் துறைக்கு - ரூ.19,984 கோடி
சமூகநீதித் துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கீடு
69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை
அனைவருக்கும் சம வாய்ப்பு - ரூ. 462.41 கோடி நிதி ஒதுக்கீடு
விஜய் மாமா என்று அழைக்கும் செல்வங்களை நாள்தோறும் முதல்-அமைச்சர் விஜய் சிந்திக்கிறார்.
காமராசர் காலை உணவுத் திட்டம் - ரூ.710 கோடி ஒதுக்கீடு
கூட்டுறவு துறை - ரூ.8,028 கோடி ஒதுக்கீடு
ரூ.35,062 கோடியில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.