தமிழக செய்திகள்

15 காவல்துறையினருக்கு முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் அறிவிப்பு

போதைப்பொருள் ஒழிப்பில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

பதக்கம் பெறுபவர்களின் விவரம் பின்வருமாறு:-

இந்த பதக்கம் முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யால் 2026-ம் ஆண்டிற்கான சுதந்திர தின விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.