தமிழக செய்திகள்

புதுக்கோட்டை தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

படுகாயம் அடைந்த 6 பேருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென தேர் முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடினர்.

இந்த விபத்தில் தேருக்கு அருகில் நின்ற 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்து உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த காயமடைந்த 6 பேருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார். 

SCROLL FOR NEXT