திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தூரம் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல் கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
வழக்கமாக கார்த்தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் மகா தீபத்தன்று அல்லது தீபத்திற்கு மறுநாள் தொடங்கும். இந்த ஆண்டு கார்த்திகை மாத பவுர்ணமி மகா தீபத்திற்கு முந்தைய நாள் தொடங்குகிறது. அதன்படி கார்த்திகை மாத பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) இரவு 11.42 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8.23 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகா தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலம் என இந்த ஆண்டு சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.