சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை மாம்பலம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
அதன்படி, எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22675), எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12633) மாம்பலம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
அதேபோல, எழும்பூரில் இருந்து புதுச்சேரி (16115), எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும். பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12661) மாம்பலத்தில் இன்று முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நின்று செல்லும்.
எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் (12637), எழும்பூரில் இருந்து செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (12631), மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16179), சேலம் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) மாம்பலம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.