கிருஷ்ணராயபுரம்,
கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கரூர் மாவட்டம். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் எல்.இ.டி. திரையில் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்ட த.வெ.க.வின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சண்முகவேல் உத்தரவிட்டார்.