தமிழக செய்திகள்

வீடு வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபசாரம்: மேலும் ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் மகன், நெல்லையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அந்த வீட்டுக்கு ஆண்கள், பெண்கள் என பலர் வந்து சென்றுள்ளனர்.

நெல்லை,

நெல்லை வண்ணார்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய வழக்கில் ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வீடு வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபசாரம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா பேரையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரின் மகன் ரஞ்சனி (வயது 30). இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அந்த வீட்டுக்கு ஆண்கள், பெண்கள் என பலர் வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் ரகசியமாக நடத்திய விசாரணையில், ரஞ்சனி அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

மேலும் ஒருவர் கைது

இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த வெளிமாநில இளம்பெண் ஒருவரை மீட்ட போலீசார், அவரை காப்பத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய எம்.கே.பி. நகரை சேர்ந்த ரவிகுமார்(50) என்பவரை பாளையங்கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT