தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 11 பேர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை,

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 35 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

தென்மாத்தூரில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. மீனாட்சிபுரத்தில் உள்ள பொறியாளர் கண்ணன் வீட்டில் சோதனை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது.

2006-11 ல் அமைச்சராக இருந்தபோது சொத்துக் குவித்ததாக எ.வ.வேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சோதனையில் முடிவிலேயே முழு விவரமும் தெரியவரும்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.