தமிழக செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; த.வெ.க அரசின் பழிவாங்கல் நடவடிக்கை - எ.வ.வேலு குற்றச்சாட்டு

முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.

சென்னை,

பொதுப்பணித்துறையில் முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் தி.மு.க. முன் னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தமிழகம் முழுவதும் 14 இடங் களில் சோதனை நடத்தியது. ரூ.40 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருந்த நிலையில், செய்தியாளர்க்ளுக்கு பேட்டி அளித்த எவ வேலு கூறியதாவது:

சம்பந்தமே இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்துகிறார்கள்; சோதனையால் நாங்கள் அஞ்சி விடுவோம் என தவெக அரசு நினைக்கிறதுநாங்கள் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்; ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிப்பது தவறான தகவல்; ஒரு பைசா கூட கைப்பற்றவில்லை;

கரூர் சாலைப் பணிக்கான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பான ஆவணங்கள் எனது இடத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. த.வெ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது பேரவையில் தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்; முதலமைச்சரிடம் சட்டப்பேரவையில் கேள்வி கேட்டதால் சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்றார்.