தமிழக செய்திகள்

திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை,

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள அண்ணாதுரை வீட்டில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக எம்.பி அண்ணாதுரை சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தம் எடுத்து அண்ணாதுரை பல்வேறு பணிகளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT