தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: எஸ்.பி. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை

கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக இருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்ட எஸ்.பி. உதயகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் நாவக்கரை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். மோப்பநாய்கள் உதவியுடன் நடைபெற்ற இந்த சோதனையில், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக இருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதைப்பொருட்கள் விநியோகம் செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.