தமிழக செய்திகள்

அந்தியோதயா, குருவாயூர் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் யார்டு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

நெல்லை,

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் யார்டு மறுசீரமைப்பு மற்றும் நடை மேடை விரிவாக்கம் ஆகிய பணிகள் கடந்த 2 வாரங்களாக நடந்தன. இதன் காரணமாக குமரி மாவட்டம் வரும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

அந்த வகையில் தாம்பரத்தில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் அந்தியோதயா அதிவிரைவு ரெயில் திண்டுக்கலுடன் நிறுத்தப்பட்டது. இந்த ரெயில் கடந்த 10 நாட்களாக நாகர்கோவில் வரவில்லை. இதே போல குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நாகர்கோவில் வழியாக இயக்கப்ப டாமல் திருச்சூர், ஷோரணூர், பாலக்காடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்டது.

இதேபோல் நாகர்கோவில்-நெல்லை, கன்னியாகுமரி- நெல்லை ஆகிய பயணிகள் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. அந்தியோதயா, குருவாயூர் மற்றும் பயணிகள் ரெயில்களில் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்று வந்தனர். ரெயில்கள் ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் யார்டு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து அந்தியோதயா அதிவி ரைவு ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது. இதே போல குருவாயூர் எக்ஸ் பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களும் வழக்கமான பாதையில் இயக்கப்பட் டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.