தமிழக செய்திகள்

ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி இருந்தார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் அப்பாவு, அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்ற நிலையில், 104 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஐகோர்ட்டு தீர்ப்பு

இதனிடையே, தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்று கூறி, இன்பதுரை பெற்ற வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. மேலும், 2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்

இந்நிலையில், 2016 சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கின் தன்மையை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தி இருந்த நிலையில் அப்பாவு வென்றதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது அந்த தீர்ப்பு ஏற்புடையது அல்ல அது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முரணாக உள்ளது.

எனவே ஐகோர்ட்டு தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று இன்பதுரை தாக்கல் செய்தார். Doctrine of merger என்ற சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் இன்பதுரை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.