கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மை பட்ட படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மே 18 ஆகும்.

சென்னை,

வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகளுக்கு 2026 – 2027-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. +2 முடித்த விருப்பமுள்ள மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) , இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டும்.

விண்ணப்பங்கள் 20.04.2026 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 18.05.2026

விண்ணப்ப கட்டணம் - ரூ.200/-

For SC/ST - ரூ.100/- (சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்)

விண்ணப்பங்களை தபாலில் பெற, விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200/- (SC/ST – ரூ. 100/-) மற்றும் தபால் கட்டணம் ரூ.50/-க்கான வங்கி வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர்கள் (சேர்க்கை)

முனைவர், M. காமராஜ், ஆராய்ச்சி அலுவலர் Mobile No. 8667754203

முனைவர் S. கார்த்திகேயன், உதவி பேராசிரியர் Mobile No. 9965899822

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்

மின்வாரியசாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ பின்புறம்)

அம்பத்தூர், சென்னை - 600 098

தொலைபேசி எண். 044 – 29567885 / 29567886

Email: tilschennai@tn.gov.in

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.