தமிழக செய்திகள்

மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமனம்: தமிழக அரசு அனுமதி

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக 8,000 கள உதவியாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

முதல் கட்டமாக 2027-ம் ஆண்டில் 5,000 கள உதவியாளர்களும், 2028-ம் ஆண்டில் 3,000 கள உதவியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

புதிதாக 8,000 கள உதவியாளர்கள்

தமிழ்நாடு மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக 8,000 கள உதவியாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும்

அதன்படி, முதல் கட்டமாக 2027-ம் ஆண்டில் 5,000 கள உதவியாளர்களும், 2028-ம் ஆண்டில் 3,000 கள உதவியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நிரப்பப்பட உள்ளன. புதிதாக நியமிக்கப்படும் கள உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.341.26 கோடி செலவாகும் என மின்வாரியத் தலைவர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார்.இந்தக் கருத்துருவைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, 8,000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மின்வாரியத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

மின்வாரியத்தில் விரைவில் 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து இருப்பதால், மின்வாரிய பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனனர். விரைவில், உரிய அறிவிப்பு வெளியிட்டு இந்த பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT