தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வில் புதிய செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு

வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விடுவிப்பு

வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் M.M. கோபி அவர்கள் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக அமைப்புச் செயலாளர்:

S.T.K. ஜக்கையன், B.A., B.L., Ex. M.P., Ex. M.L.A., (க.புதுப்பட்டி, தேனி மேற்கு மாவட்டம்)

கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்:

M.M. கோபி, M.A., B.L.., அவர்கள் (பிச்சாண்டி லேன், ராயபுரம், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்)

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்:

D.K. ராஜேந்திரன் அவர்கள் (தருமபுரி, தருமபுரி கிழக்கு மாவட்டம்)

கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.