தமிழக செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா - வித்யா ராமராஜ் பேச்சு

நாம் நம்முடைய 100 சதவீத பங்களிப்பு கொடுத்தால் மட்டும் போதும் அரசு 101 சதவீதம் உதவ ரெடியாக இருக்கிறது என வித்யா ராமராஜ் கூறினார்.

சென்னை,

விளையாட்டு வீரர்களுக்குக்கான பாராட்டு விழாவில் வித்யா ராமராஜ் பேசியுள்ளார்.

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 மற்றும் 46-வது செஸ் ஒலிம்பியாட் 2026 ஆகிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளைப் பாராட்டிச் சிறப்பிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வித்யா ராமராஜ் கலந்துக் கொண்டு பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

என் பெயர் வித்யா ராமராஜ். நான் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை 3 பதக்கங்கள் வென்றுள்ளேன். 400மீ தடைதாண்டும் போட்டியில் பி.டி. உஷா அவர்களின் சாதனையை முறியடித்துள்ளேன். எனக்கு இது மிகவும் பெருமையாக உள்ளது. நான் விளையாட்டு விடுதியில் தான் தங்கி படித்தேன். எந்த ஒரு உதவியும் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கமுடியாது. தமிழக அரசுக்கு எனது நன்றிகள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் மற்றும் எனது பயிற்சியாளர் நேபாள் சிங் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு நிறைய இளைஞர்கள் இருக்கின்றீர்கள் தமிழக அரசு உதவி செய்வதற்காக ரெடியா இருக்காங்க. நாம் நம்முடைய 100 சதவீத பங்களிப்பு கொடுத்தால் மட்டும் போதும் அரசு 101 சதவீதம் உதவ ரெடியாக இருக்கிறது. உங்கள் முயற்சியை மட்டும் நம்புங்க என அவர் கூறினார்.

SCROLL FOR NEXT