தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சுமார் 1 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 872 கிலோ புகையிலை பொருட்களை அழிக்க நீதிமன்ற உத்தரவு.

சென்னை,

இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S.அரவிந்த் IPS, அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டன.

தியாகதுருவம், வரஞ்சரம்,எலவானசூர்கோட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையங்களில் கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 872 கிலோ புகையிலை பொருட்களை அழிக்க நீதிமன்ற உத்தரவு.

கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால், கள்ளக்குறிச்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் சின்னசேலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் குழி தோண்டி முறையாக அழிக்கப்பட்டன.