தமிழக செய்திகள்

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்; ஏப்ரல் 23 தமிழ்நாடு புத்திசாலிகள் தினம் - அருண்ராஜ்

நாங்கள் ஏமாறும் முட்டாள்கள் அல்லர் என்பதை மக்கள் வாக்குப் பதிவின் மூலம் நிரூபிப்பார்கள் என அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தவெக நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று ஏப்ரல் 1... முட்டாள்கள் தினம். 2021 இல் கொடுத்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு தனக்கு வாக்களித்த மக்களை முட்டாள்கள் ஆக்கி... தான் மட்டுமே புத்திசாலி போல் நினைத்துக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஏப்ரல் 23 தமிழ்நாடு புத்திசாலிகள் தினம். நாங்கள் ஸ்டாலினிடம் ஏமாறும் முட்டாள்கள் அல்லர் என்பதை மக்கள் வாக்குப் பதிவின் மூலம் நிரூபிப்பார்கள்.

இன்னும் 22 நாட்கள் நீங்கள் கனவு காணலாம் ஸ்டாலினே!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.