தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை ஏற்படும் இடங்கள் தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 03.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

மயிலாப்பூர்

விசாலாட்சிதோட்டம், டாக்டர் ரங்கா சாலை, சி.வி. ராமன்சாலை, சி.பி. ராமசாமி சாலை, பீமண்ணா கார்டன், அபிராமபுரம், சுப்பிரமணியம் தெரு, ஆனந்தபுரம், டி.டி.கே. சாலை, டி'மாண்டி காலனி, ஸ்ரீ லப்தி காலனி, அசோகா தெரு, பாவா சாலை, சௌந்தரராஜன் தெரு, விசாலாட்சி நகர், செயிண்ட் மேரிஸ் சாலை, விநாயகம் தெரு, ஜெத்நகர் பிரதாக சாலை, ஜெத்நகர் 1வது, 2வது மற்றும் 3வது தெருக்கள், அம்மணி அம்மாள் தெரு, பட்டம்மாள்தெரு, அருணாசலம் தெரு, நல்லியப்பன் தெரு, தேவநாதன் தெரு, திருவள்ளூர்பேட்டைதெரு, சந்திரசேகரன் தெரு, வி.கே. ஐயர் சாலை, வன்னியம்பதி தெரு, வி.சி. கார்டன் 1வது, 2வது மற்றும் 3வது தெருக்கள், வெங்கடேச அக்கிரஹாரம் தெரு, ஆர்.கே. மடம் சாலை, லாலா தோட்டம், டிரஸ்ட்பாக்கம் தெற்கு மற்றும் வடக்கு, ஸ்ரீனிவாசன்தெரு, சிவராமன்தெரு.

அம்பத்தூர்

வானகரம் சாலை,பள்ளி நலச் சங்கத் தெரு, வெள்ளாளர் தெரு,3-வது பிரதான சாலை, எம்சாலை .எச்.டி., டி .பி.67 முதல் 94 வரை மற்றும் 14-வது தெரு, நக்கீரன் தெரு, நாகேஸ்வரராவ் தெரு,கல்யாணி எஸ்டேட், முனுசாமி தெரு,அலக் ரெட்டி பிளாட், ஸ்ரீராம் பிளாட், குப்பம், ஆச்சி மசாலா தெரு, ,சங்கர் ஷெலிங், நடேசன் நகர், தேவி கருமாரியம்மன் நகர், சின்ன காலனி, பெரிய காலனி, பிரின்ஸ் அபார்ட்மெண்ட், பி .எம்.கே.சாலை, பிருந்தாவன் காலனி.

பெசன்ட்நகர்

7வது அவென்யூ, ருக்குமணி சாலை, எம்.ஜி.ஆர் சாலை மற்றும் விரிவாக்கம், அருண்டெல் பீச் சாலை.

கொட்டிவாக்கம்

கொட்டிவாக்கம் குப்பம் சாலை, 2வது சீவர்ட் சாலை முதல் 4வது சீவர்ட் சாலை வரை, பாலகிருஷ்ணா சாலை, திருவீதியம்மன் கோயில் தெரு, ஈ.சி.ஆர் பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 1வது முதல் 8வது பிரதான சாலை வரை, 1வது முதல் 54வது கிராஸ் தெரு, ஐஓபி, பகத்சிங் சாலை 1வது முதல் 6வது தெரு வரை, ஆர்டிஓ அலுவலகம், சிவானி அபார்ட்மென்ட்ஸ்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.