சென்னை
சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்துத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக திருவேற்காடு பகுதியில் சிவன் கோவில் சாலை, ஈஸ்வரன் நகர், செல்வகணபதி நகர், முருகன் நகர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மேலும், மேடவாக்கம் பகுதியில் வெள்ளக்கல் பிரதான சாலை, ஆஞ்சநேயர் கோவில் தெரு, பெல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், சைதாப்பேட்டை, தாம்பரம் மேற்கு மற்றும் கிழக்கு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளிலும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.