சென்னை,
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (11.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பூந்தமல்லி: ருக்மணி நகர், மேல்மா நகர், முத்தமிழ் நகர், முத்துகுமரன் நகர், சுமித்ரா நகர், அம்பேத்கர் நகர், விஜயலட்சுமி அவென்யூ, கபாலி தெரு, டிரான்க் சாலை ஒரு பகுதி, குளக்கரை தெரு. எட்டி அண்ணல் நகர், தேவதாஸ் நகர்.