சென்னை,
சென்னையில் ஜூன் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னையில் 02.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அண்ணாசாலை : டி. எண் 1 முதல் 154 வரை, 784 முதல் 829 வரை, பூதபெருமாள் தெரு, பெருமாள் தெரு, இபி லிங்க் தெரு, எல்லிஸ் ரோடு, ஜி.பி.ரோடு, பூபேகம் தெரு, எல்.என்.ஜி. சாலை, மோகன்தாஸ் சாலை, பார்டா தோட்டம், பேகம் சாகிப் தெரு, சாமி ஆச்சாரி தெரு, சுபேதரல் 1வது தெரு, சையது அப்துல் தெரு, பங்காரு நாய்கன் தெரு, குப்பமுத்து தெரு, வாலர்ஸ் சாலை, டேம்ஸ் சாலை, கரிம் மொய்தின் தெரு, தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல், பிளாகர்ஸ் சாலை, டெலிபோன் நிலையம், ஸ்டேட் பேங்க் தெரு, ஆறுமுகம் தெரு, வெல்டர்ஸ் தெரு, பஜ்ரங்கன் பகதூர் தெரு, ஆதித்தனார் சாலை, சந்திர பானு தெரு, சி.பி.எம். தெரு, சாமி செட்டி தெரு, புதுபேட்டை காவலர் குடியிருப்பு மற்றும்அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
திருவேற்காடு: சின்ன கோளாடி, கோலடி சாலை, திருவேங்கட நகர், செல்லியம்மன் நகர், ஸ்ரீனிவாச நகர், தேவி கருமாரியம்மன் நகர், லட்சுமி நகர் மற்றும் சன்னதி தெரு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.