தமிழக செய்திகள்

திண்டுக்கல்லில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி பண்ணப்பட்டி, குரும்பப்பட்டி, காரமடை, சர்க்கரை கவுண்டன்சாலை, கீழத்திப்பம்பட்டி, புதுப்பட்டி, சுரக்காய்பட்டி, தெத்துப்பட்டி, மலையாண்டிபுரம், தருமத்துப் பட்டி, பழைய கன்னிவாடி, ராமலிங்கம் பட்டி, தோனிமலை, மேலதிப்பம் பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி, டி.கோம்பை, மல்லையாபுரம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற் கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.