தமிழக செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது.

காஞ்சீபுரம்,

பராமரிப்புப் பணிகள் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பின்வரும் பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டம், காஞ்சீபுரம் தெற்கு கோட்டம், தாமல் துணை மின் நிலையம் மற்றும் முசரவாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,

பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர், ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளூர், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லுர், ஜாகீர்தண்டலம், பனப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை காஞ்சிபுரம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.