தமிழக செய்திகள்

தமிழகத்தின் நிரந்தர கவர்னராக அர்லேகர் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

தமிழகத்தின் நிரந்தர கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

தமிழகத்தின் நிரந்தர கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தின் நிரந்தர கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளம் மாநில கவர்னராக பதவி வகித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராகவும் அவர் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான், தற்போது அவர் தமிழகத்தின் நிரந்தர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அர்லேகர் தமிழகத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிக்கிம் மாநில கவர்னராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளம் மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சிக்கிம் கவர்னராக துஸ்யந்த் கவுதமும், ஒடிசா கவர்னராக ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் பிராஜ் மோகன் ராமும், கர்நாடக கவர்னராக சுதா யாதவும், உத்தரகாண்ட் கவர்னராக தால் சிங் பைசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT